கன்னியாகுமரி மாவட்டம் சுருலோடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கூவை காடு மலை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல்..

கன்னியாகுமரி மாவட்டம் சுருலோடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கூவை காடு மலை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காணியாள மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அரசு இலவச வீட்டு திட்டத்தின் கீழ் கட்டுமான பொருட்கள் வனத்துறையினர் தடுத்ததால். ஐம்பதிற்கும் மேற்பட்ட காணியாள மக்கள் குடும்பத்துடன் நாகர்கோயில் நெடுமங்காடு தேசிய நெடுஞ்சாலையில் தடிக்காரன்கோணம் வனத்துறை சோதனை சாவடி அலுவலகம் முன்பு மறியல் போராட்டம். கன்னியாகுமரி மாவட்டம் மலைகிராமங்களில் முதலமைச்சரின் பசுமை வீடு இத்திட்டத்தில் வீடுகளில் பணிகளுக்கு கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல தடை விதித்த வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மலை கிராமமான கீரிப்பாறை அருகே உள்ள கூவை காடு பகுதியில் குடியிருக்கும் மலைவாழ் மக்கள் தங்கள் பாழடைந்து கிடக்கும் வீடுகளை சரி செய்வது கட்டுமான பொருட்கள் தடிகாரகோணம் வழியாக வாகனத்தில் கொண்டு செல்வது வழக்கம் ஆனால் திடிரென கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல வனத்துறை தடை விதித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் தடிகாரகோணம் சோதனை சாவடி முன்பு சாலை மறியலில் ஈடுப்பட்டார்கள் இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்ப்பட்டது. போலீஸ் தரப்பில் இன்ஸ்பெக்டர் ராஜ சுந்தர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சம்பவத்திற்கு தடைவிதித்த வனத்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். சம்பவ இடத்திற்கு வராததால் தடிக்காரன்கோணம் ஜங்ஷனில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தினர். இதனால் நாகர்கோவிலில் இருந்து நெடுமங்காடு செல்லும் வாகனங்கள் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..