மதுரை மாநகர காவல் துறை சார்பாக சார்பாக இலவசமாக முக கவசம்

மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி மதுரை மாநகரில் வசிக்கும் பொதுமக்களை கொரோனா தொற்றிலுருந்து பாதுகாக்க மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களில் உள்ள காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் மூலமாக 5000- க்கும் மேற்பட்ட முக கவசங்கள் காவல்துறை அதிகாரிகளால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது… மேலும் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கும் பொழுது அனாவசியமாக பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் எனவும் அப்படி வரும் பொது மக்கள் கட்டாயமாக முக கவசம் அணிந்து வெளியே வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். நோய்த்தொற்று எவ்வாறு எப்படி பரவுகிறது என்று தெரியவில்லை எனவும் அதனால் தயவு செய்து பொது மக்கள் முக கவசம் அணிந்து அவசியம் என்றால் மட்டுமே வெளியே வாருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image