நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளர் குடும்பத்திற்கு நிதி உதவி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றிய சேகர் கடந்த சில மாதத்திற்கு முன்பு திடீரென உடல்நிலை சரியில்லாமல் இறந்து போனார். இவரது குடும்பத்திற்கு நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து அரசின் சார்பாக குடும்பத்திற்கு வழங்கக்கூடிய நீதியில் ரூபாய் 3 லட்சமும் மற்றும் இதர நிதிக்கான காசோலையை அலுவலக உதவியாளர் சேகரின் மனைவி தனலட்சுமியிடம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் யாகப்பன் வழங்கினார்.நிகழ்ச்சியில் ஒன்றிய ஆணையாளர் லாரன்ஸ், நிலக்கோட்டை முன்னாள் பேரூராட்சித் தலைவர் வி எஸ் எஸ் சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் ( கிராம ஊராட்சி) செல்வராஜ், ஒன்றிய அலுவலக மேலாளர் பாலகிருஷ்ணன், நூத்துலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் உட்பட பலர் இருந்தனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image