ரோட்டரி மாவட்டம் 3000 புதிய ஆளுநர் பதவியேற்பு

2020-2021 ம் ஆண்டிற்கான ரோட்டரி மாவட்டம் 3000 க்கு புதிய ஆளுநராக புதுக்கோட்டையை சேர்ந்த லேனா மெடிக்கல் AL சொக்கலிங்கம் தேர்வு செய்யபட்டார்.இதற்கான பதவியேற்பு நிகழ்ச்சி புதுக்கோட்டை மெளண்ட் சியோன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.இதில் மாவட்ட முன்னாள் தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் பொறுப்பு ஏற்று பதவியேற்றுக் கொண்டார்,ஆளுநர் ALசொக்கலிங்கத்திற்கு 2019-20ம் ஆண்டு ஆளுநர் டாக்டர் ஜமீர் பாஷா பதவி பிரமானம் செய்து வைத்தார்.

முன்னாள் ஆளுநர்கள் ராகவன், கோபால், 20-21ம் ஆண்டு ஆளுநர் ஜெய்க்கன், 2022- 23 ம் ஆண்டு ஆளுநர் ஜெரால்ட் ஆகியோர் காணொலி மூலம் வாழ்த்துகளை தெரிவித்தனர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களும் நேரில் வாழ்த்துரை வழங்கினர்.பின்னர் ஆளுநராக பதவியேற்றுக் கொண்ட ALசொக்கலிங்கம் ரோட்டரி சங்கத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பேன், ஏழை எளிய மக்களுக்கு .உதவிகள் வழங்குதல், கொரானா வைரஸ், போலியோ உள்ளிட்ட நோய்களை கட்டுபடுத்த பெரிதும் தீவிரம் காட்டப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் இந்த ஆண்டின் பயிற்சியாளர் முன்னாள் ஆளுநர் முருகானந்தம் நம்மால் முடியும் என்ற தலைப்பில் காணொலி மூலம் வாழ்த்துரை வழங்கினார், பட்டிமன்றபேச்சாளர் தங்கம்மூர்த்தி சிறப்புரையாற்றினார்.மேலும் ரோட்டரி மாவட்ட பொது செயலாளர் அருணாசலம், கான் அப்துல்கபார்கான், மாவட்ட செயலாளர் கனகராஜ், பொருளாளர் முத்து மற்றும் புதுக்கோட்டை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் சேவியர் RM.v.கதிரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image