இராஜபாளையம் அருகே புதிதாக திறக்க இருக்கும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம்..

இராஜபாளையம் அருகே புதிதாக திறக்க இருக்கும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் 50க்கும் மேற்ப்பட்டோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சோழபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆசிலாபுரம் கிராமத்தில் பெண்கள் மேல் நிலைப் பள்ளி உள்ளது. இதன் அருகே புதிதாக டாஸ்மார்க் கடை திறப்பதற்காக நேற்று (30/06/2020) டாஸ்மாக் கடையில் மதுபான பாட்டில் பெட்டிகளை கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி இன்று (01/07/2020) திறக்க இருந்த டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் கடை முன்பு 50 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் என கடை முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பகுதியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது மற்றும் பெண்கள் இயற்கை ஊபாதைக்காக பயன்படுத்தும் இடமாக இருப்பதால் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை கொண்டுவரக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் மாரிஸ் வரி வேல்முருகன் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பேசி இந்த கடை இங்கு வராது என்று உறுதி அளித்த பின்பு அப்பகுதி பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பெண்கள் கூறும் பொழுது, “இந்தப் பகுதியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது மற்றும் பெண்கள் நாங்கள் பயன்படுத்தி வரக்கூடிய இந்த இடத்தில் டாஸ்மார்க் கடை வருவது எங்களுக்கு ஆபத்தாக இருக்கிறது டாஸ்மார்க் கடை கொண்டு வரக்கூடாது அதையும் மீறி கொண்டுவந்தால் கடையை அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்”.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..