கொரோனா தொற்று சிகிச்சை மாவட்ட நிர்வாகத்துக்கு எஸ்டிபிஐ கோரிக்கை.

இது தொடர்பாக எஸ்டிபிஐ., கட்சி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் எம்.ஐ.நூர் ஜியாவுதீன் கூறுகையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு அதிகமான நபர்கள் வந்து கொண்டு இருக்கின்றனர். அவர்களை அரசே, 15 நாட்கள் தனிமைப்படுத்தி பிறகு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கிறது. இந்நிலையில் சார்ஜாவில் உள்பட பிற நாடுகளில் இருந்து இன்று இராமநாதபுரம் வந்த சிலருக்கு கொரோனா தொற்று உள்ளது என தெரிய வந்துள்ளது. இவர்களை தனிமை படுத்தாமல் தொற்று இல்லாதவர்களுடன் ஒன்று சேர்த்து இராமநாதபுரம சேதுபதி அரசு கலை கல்லூரி மற்றும் பிற இடங்களில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் மேலும் தொற்று பரவும் அபாயம் உள்ளது. ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அவர்களை கொரோனா கட்டுப்பாட்டு உடனே மையத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..