கொரோனா ஊரடங்கு எதிரொலி-வெறிச்சோடி காணப்பட்ட சுரண்டை பேருந்து நிலையம்…

தமிழகத்தில் கொரோனா தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு ஊரடங்கில் பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன் ஓரு பகுதியாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் மாவட்டத்திற்குள்ளான போக்குவரத்து சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதிக்கு வரும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் சுரண்டை பஸ்ஸ்டாண்ட், மார்க்கெட், மெயின் ரோட்டில் கூட்டம் மிக குறைவாகவே காணப்பட்டன. இதனால் கடைகள் வழக்கம் போல திறந்திருந்தாலும் வாடிக்கையாளர்கள் கூட்டம் மிக குறைவாக இருந்தது. பேருந்துகள் இயங்காததால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அன்றாட பணிகளுக்கு செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாயினர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image