கீழையூரில் மின்கசிவால் எரிந்த கூரை வீட்டை எம் எல் ஏ எஸ் நேரில் சென்று பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட கீழையூர் ஊராட்சி மகாராஜபுரம் தெரு பகுதியில் வசித்து வருபவர் க.பாஸ்கர் இவரது வீடு மின்கசிவால் எரிந்து நாசமாயின. வீட்டிலிருந்த துணிகள் மற்றும் மின் சாதன பொருட்கள் எரிந்து நாசமாயின. இதனை அறிந்த பூம்புகார் சட்டமன்ற அதிமுக உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் பாதிக்கப்பட்டவர் வீட்டிற்கு சென்று அரசின் சார்பில் அரிசி, மண்ணெண்ணெய், வேட்டி, புடவை, ரூ.5 ஆயிரமும், சட்டமன்ற உறுப்பினர் தனது சொந்த செலவில் ரூபாய் 2 ஆயிரமும் வழங்கி ஆறுதல் கூறினார். தரங்கம்பாடி வட்டாட்சியர் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர் மெ.மணிகண்டன், கீழையூர் கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கித் தலைவர் கபடி பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் திருவளர்சுந்தரி ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இரா. யோகுதாஸ்,
மயிலாடுதுறை செய்தியாளர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply