சுரண்டை பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்-கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்…

தமிழகத்தில் கொரோனா‌ தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன், திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் குற்றாலிங்கம் ஆகியோரின் அறிவுரையின் அடிப்படையிலும், சுரண்டை பேரூராட்சி பகுதியில் நிர்வாக அதிகாரி அரசப்பன், வட்டார சுகாதார மேற்ப்பார்வையாளர் இசக்கியப்பா, தூய்மை மேற்ப்பார்வையாளர் ராமர் மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாத 11 நபர்களிடம் ரூ.1100/- அபராதமாக வசூல் செய்யப்பட்டது.

மேலும் பேரூராட்சி மூலம் முககவசம் வழங்கப்பட்டு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து தினமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதாகவும், சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், முககவசம் அணியாமல் வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிர்வாக அதிகாரி அரசப்பன் தெரிவித்தார்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image