உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியில் கிராமத்திற்கு சாலை வசதிகேட்டால் மதுக்கடைக்கு தார்சாலை அமைப்பதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட குப்பணம்பட்டி கிராமத்தில் சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் சாலைவசதி, குடிநீர் வசதி, சாக்கடைவசதி போன்ற எந்த விதமான அடிப்படை வசதியும் இல்லை என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து செல்லம்பட்டி வட்டார வளர்ச்சி அதிகாhரிகளிடம் பல முறை மனு அளித்தும் இதுவரை எந்த அடிப்படை வசதியும் செய்துதரவில்லை .

இந்நிலையில் குப்பணம்பட்டி கிராமத்தில் ஊருக்கு ஒதுக்கு புறமாக விவசாய நிலப்பகுதியில் கடந்த ஒரு வருடங்களாக செயல்பட்டு வரும் அரசு மதுக்கடைக்கு வாகனங்கள் செல்ல ஏதுவாக தார்சாலை அமைப்பதாக கூறி பாதையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.மேலும் விவசாயநிலத்திலுள்ள மண்ணையே சாலை அமைப்பதற்குப் பயன்படுத்தி வருகின்றனர். கிராமத்திற்கு சாலை வசதி கேட்டால் போதிய நிதி இல்லை என கூறும் அதிகாரிகள் மதுக்கடைக்கு மட்டும் தார்சாலை அமைக்க எங்கிருந்து நிதி வந்தது என கூறி தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் கிராம மக்கள் எதிர்ப்பையும் மீறி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் குப்பணம்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

உசிலை சிந்தனியா

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply