சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் வகையில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் பின்னோக்கி நடந்து 1000கி.மீ நடைபயணம்…

சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் வகையில் கொரானாவை முற்றிலும் ஒழித்து நாடு வளம் பெற வேண்டியும், உலக மக்கள் நன்மைக்காகவும் வைகை பட்டாள ராணுவ வீரர்கள் சார்பாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் பின்னோக்கி நடந்து 1000கி.மீ நடைபயணம்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள பொதுமக்களிடையே தோற்று பரவல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தை சேர்ந்த ராணுவ வீரர் பாலமுருகன் என்பவர் வைகை பட்டாள ராணுவ வீரர்கள் சார்பாக சிவகங்கை மாவட்டம் முழுவதும் 1000கிலோ மீட்டர் தொலைவிற்கு பின்னோக்கி நடக்கும் நிகழ்ச்சி கடந்த 26ந் தேதி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

நான்காவது நாளாக தொடர்ந்து பின்னோக்கி நடக்கும் தனது நடைபயணத்தை தொடர்ந்துள்ளார். சமூக சேவையில் அக்கறையுடன் நடை பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் பாலமுருகன் என்பவர் கூறுகையில், நான் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் சொந்த ஊர். அசாம் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறேன் தற்போது குரானா வைரஸ் காரணமாக விடுமுறைக்கு வந்துள்ளேன்.,

எனக்கு சமூக சேவையில் சாதிக்க வேண்டும் சாதனை புரிய வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். அந்த வகையில் வைகை பட்டாள ராணுவ வீரர்கள் சார்பாகவும் கொரானா நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் அது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் வகையிலும் சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து ஊராட்சி பகுதிகளில் சென்று 1000 கிலோ மீட்டர் தொலைவிற்கு பின்னோக்கி நடக்கும் பயணத்தை தொடங்கி இருக்கிறேன்.,

அந்தவகையில் நான்காவது நாளாக எனது பயணத்தை தொடர்ந்து உள்ளேன். அடுத்ததாக 13 ஆயிரம் கிலோமீட்டர் நடந்து உலக சாதனை புரிய உள்ளேன். பெரிய நிறுவனங்கள் சமூக அமைப்புகள் எனக்கு ஒத்துளைப்பு தந்தாள் 15 ஆயிரம் கிலோமீட்டர் அளவிற்கு பின்னோக்கி நடக்கும் நடை பயணம் செல்வேன்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply