மேமாத்தூரில்  ஆழமான  பள்ளங்களை தோண்டி மக்களை அச்சுறுத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்     

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகேயுள்ள மேமாத்தூரில்  ஓஎன்ஜிசி நிறுவனம் இராட்சச இயந்திரங்கள் மூலம் ஆழமான  பள்ளங்களை தோண்டி வருவதை கண்டித்தும், பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும்  மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மேமாத்தூர் கெயில் நிறுவன அலுவலகம் முன்பு நடைப்பெற்றது.   மேமாத்தூரில் கீழ்மாத்தூர் செல்லும் சாலையோரத்தில்(மஞ்சளாற்று கரை) 45 அடி ஆழத்திற்கும் மேல் இராட்சச இயந்திரங்கள் மூலம் பிரமாண்ட பள்ளங்களை ஓஎன்ஜிசி நிறுவனம் தோண்டி வருகிறது. மக்களை பீதியில் உறைய வைத்துள்ள இப்பள்ளங்களால் அருகிலுள்ள குடியிருப்புகள்,தார்சாலைகள் இடிந்துவிழும் அபாயம் உள்ளது.

நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  மார்க்சிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார்.கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், டி.இராசையன், ஏ.ரவிச்சந்திரன் கண்டன உரையாற்றினர். வட்டக்குழு உறுப்பினர்கள் டி.கோவிந்தசாமி,காபிரியேல்,  கே.பி.மார்க்ஸ், பஷீர் அகமது,வெண்ணிலா,கண்ணகி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.நிறைவாக கிளை செயலாளர் தேவேந்திரன் நன்றி கூறினார். மக்களைஅச்சுறுத்தும் வகையில் ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.
இரா.யோகுதாஸ்,
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply