தனியார் நிறுவனங்கள் தனிநபர்கள் கட்டாய வட்டி வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்-தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை..

நெல்லை, தென்காசி மாவட்ட பொது மக்கள் சிறு வணிகர்கள் தமிழக அரசுக்கும்,காவல் துறைக்கும் ஓர் வேண்டுகோளை முன் வைக்கின்றனர்.

உலகம் முழுவதும் ஆட்டிப்படைக்கும் கண்ணுக்கு தெரியாத கொரனா நோய்த்தொற்று தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் அவ்வப் போது முழு ஊரடங்கினை தமிழக அரசு ஏற்படுத்தி வருகின்றது.

தமிழகத்தில் நோய்த்தொற்று ஏற்பட்ட காலகட்டம் முதல் இன்று வரை பொதுமக்கள் வேலைகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.இதனால் சிறு வணிகர்கள் பொதுமக்கள் அன்றாட வேலைக்கு செல்லும் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை,தென்காசி மாவட்டங்களில் நோய் தொற்று ஏற்படுவதற்கு முன்னர் பொது மக்களும் வணிகர்களும் தனியார் நிறுவனங்களிடம், தனி நபர்களிடம் வட்டிக்கு பணத்தை வாங்கி குடும்பச் செலவுகளை செய்தும், தொழில்களை நடத்தியும் வந்தனர்.

தற்போது தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதால் சரிவர வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையால் குடும்பத்தை நடத்துவதற்கு கஷ்டப்படுகிற இந்த சமயத்தில் வட்டிக்கு கடனளித்த சிலரால் அசல் மற்றும் வட்டியை கேட்டு பொதுமக்களிடம் வந்து தொந்தரவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

நாள் வட்டி, வார வட்டி ,மாத வட்டி போன்ற எண்ணற்ற வட்டிகளை வாங்கியவர்கள் இந்த கொரனா நோய்தொற்று காலத்தில் கட்ட முடியாமல் அவதிக்கு உள்ளாகின்றனர். வட்டிக்கு கொடுத்தவர்களும் இவர்களை விட்டபாடில்லை ,ஆகவே தமிழக அரசும் காவல் துறையும் இதை கவனித்து ஊரடங்கு முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரை ,தனியார் நிறுவனம்/தனிநபர் எந்த ஒரு இடையூறும் செய்யாத வகையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply