இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு “சிறந்த மக்கள் சேவர்” விருது..

இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ் கனி. ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, வெளிநாடு வாழ் தமிழர்கள் தாயகம் திரும்ப நவாஸ் கனி தொடர்ந்து உதவி வருகிறார். சர்வதேச அளவில் கொரானா காலத்தில் சிறந்த சேவை ஆற்றினார்.

இந்நிலையில், கோவிட் 19 ஸ்டார்ஸ் உலகளாவிய மனித நேய விருதாளர் பட்டியலை,  லண்டன் வேர்ல்டு ஹியுமனிட்டேரியன் டிரைவ்  என்ற சர்வதேச தொண்டு அமைப்பு  நேபாள் முன்னாள் பிரதமர் மாதவ் குமார்,  கொசோவோ நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஃபத்மீர் சேஜ்டியூ, ஸ்பெயின் நேஷனல் ஆசெம்ப்ளி தலைவர் பெட்ரோ ஐ அல்டமிரனோ உள்ளிட்ட சர்வதேச தலைவர்கள் முன்னிலையில் நேற்று (28/06/2020) வெளியிட்டது.

இதில், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ் கனி  அரசியல் பிரிவில் மனிதாபிமானி விருது பட்டியலில் இடம் பிடித்தார்.  கொரானா பேரிடர் காலத்தில்  சர்வதேச அளவில்  சிறந்த சேவை ஆற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து இவர் ஒருவரே தேர்வு செய்யப்பட்டார். நவாஸ் கனியின் அரசியல் சார்ந்த பொது சேவையை பாராட்டி உலக மனிதாபிமான இயக்கம் சார்பில்  சர்வதேச மனிதாபிமானி விருது  வழங்கப்படுகிறது.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply