பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் மோடி அரசை கண்டித்தும் மதுரை அவனியாபுரத்தில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்..

கொரானா ஊரடங்கு காலத்திலும் பெட்ரோல் டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து வருகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அவனியாபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக அவனியாபுரம் தொகுதி தலைவர் ராமசாமி தலைமையில் மத்திய அரசுக்கு எதிராக பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்ப பெற கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஜோதி ராமலிங்கம் கஜேந்திரன் முனியாண்டி குமரய்யா உள்ளிட்டகாங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply