படகு பழுதால் 3 நாளாக நடுக்கடலில் தத்தளித்த ராமேஸ்வரம் மீனவர்கள்: இலங்கை கடற்படை மீட்டு சர்வதேச கடல் எல்லையில் ஒப்படைப்பு..

ராமேஸ்வரம் கிருஷ்ணவேணி என்பவரது விசைப்படகில் ராமேஸ்வரம் மீனவர்கள் செல்வகுமார், பசீர், அண்ணாதுரை, சீனி ஆகியோர் 27.6.2020 காலை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றனர்.

அன்று இரவு நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகு இன்ஜின் நடுக்கடலில் பழுதாகியது. இதனால், படகிலிருந்த மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் நடுக்கடலில் தத்தளித்தனர். கடல் சீற்றத்தால் படகு, இலங்கை மன்னார் கடல் பகுதிக்குள் சென்றது.

இந்நிலையில் நேற்று மாலை அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை படகுடன் மீட்டு சர்வதேச கடல் எல்லையில் வைத்து விசாரித்தனர். இது குறித்து இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்த ராணி துர்க்கா தேவி ரோந்து கப்பல் படை வீரர்களிடம் மீனவர்கள், விசைப்படகை ஒப்படைத்தனர்.

இந்திய கடலோர காவல் படை கப்பல் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே வைத்து சக மீனவர்களிடம் ஒப்படைத்தனர். கரை சேர்ந்த மீனவர்களிடம் உளவுத்துறை, வருவாய் துறை , மெரைன் போலீசார், மீன் வளத்துறை அதிகாரிகள் விசாரித்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply