போலி போலீசுக்கு திருப்பரங்குன்றம் போலீசார் காப்பு…

பெருங்குடி அருகே சார்பு – ஆய்வாளர் போல் நடித்து ரூபாய் 2500 பறிமுதல் செய்த வாலிபரை திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பெருங்குடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சிறப்பு எஸ்.ஐ. போல் உடையணிந்து பொது மக்களிடம் பணம் வசூல் செய்வதாக வந்த தகவலையடுத்து. திருமங்கலம் டி.எஸ்.பி. அருள் உத்திரவின் பேரில் போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்,

இன்று (29/06/2020)  காலை தனிப்படைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கப்பலூர் பகுதியில் இருந்து ராமன் (வயது 43) என்பவர் தப்பி ஒட முயன்ற போது பிடிபட்டார், இதனை தொடர்ந்து ராமனிடம் போலீஸார் விசாரணை செய்ததில் திருமங்கலம் தாலுகா காண்டை அருகே உள்ள எர்ரல் மலம்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்ன கண்ணு தேவர் மகன் என்றும்.

இவர் போலீசார் போல் வேடமணிந்து தேனி, விருதுநகர் , ராமநாதபுரம் தூத்துகுடி மற்றும் கேரளாவில் உள்ள மூணாறு பகுதிகளிலும் வசூல் வேட்டையில் ஈடுபட்டது. தெரிய வந்தது இதற்கு முன்னர் திருமங்கல ம் ஆட்டு சந்தையில் எஸ்.ஐ. உடையணிந்து வசூல் வேட்டையாடிய போது திருமங்கலம் தாலுகா போலீஸார் கைது செய்தனர்.

இந்திலையில் ராமன் மீண்டும் போலீஸில் சிக்கியுள்ளார். இவருக்கு டூப் அல்வா பீட்டர் ராமன் என்ற பட்ட பெயரும் உண்டு. மதுரை பழங்காநத்தம். மாடக்குளம் பகுதியில் திருமண முந்துள்ளது, இவருக்கு ஒரு மகன் மகள் உள்ளனர். பல வருடங்களாக பல்வேறு இடங்களில் போலீசாராக வலம் வந்த டூப் அல்வா பீட்டர் ராமன் கைது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பாபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..