இராமநாதபுரத்தில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியுடன் எஸ்டிபிஐ கட்சி போராட்டம்!

கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை துரிதமாக. தமிழகம் அழைத்துவர வேண்டும், தினமும் உயரும் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும், மின் கட்டணம், டோல்கேட் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், கொரோனா அபாயம் நீங்கும் வரை பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும், அனைத்து கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்க வேண்டும் ஆகிய 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்டிபிஐ., கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் சமூக இடைவெளியுடன் இன்று (27.6.2020) கோரிக்கை போராட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரத்தில் நடந்த போராட்டத்துக்கு எஸ்டிபிஐ., கட்சி மாவட்ட தலைவர் எம்.ஐ.நூர் ஜியாவுதீன் தலைமை வகித்தார். இராமநாதபுரம் நகர தலைவர் நஜிமுதீன், தொகுதி தலைவர் அப்துல் ஜமீல், தொகுதி துணைத்தலைவர் நவாஸ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு போக்குவரத்து கழக பணி மனை, கேணிக்கரை, சந்தை திடல், சின்னக்கடை, பாரதி நகர் ஆகிய இடங்களில் சமூக இடைவெளியுடன் போராட்டம் நடைபெற்றது.

இதில் நகர் செயலர் சகுபர் சாதிக், நகர் துணைத்தலைவர் ஜான் முஹமது, அனீஸ் இஸ்மாயில், நகர் இணைசெயலர் அபிவக்காஸ், அக்பர் அலி, அப்துல் ஹக்கீம் மற்றும் நகர் பொருளாளர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..