சூரிய ஒளிமறைப்புகளை ஆய்வு செய்ய, 11 வானியல் தேட்டங்களில் ஈடுபட்ட அமெரிக்க வானியலாளர் ஏபர் தவுசுட் கர்டிசு பிறந்த தினம் இன்று (ஜூன் 27, 1872).

ஏபர் தவுசுட் கர்டிசு (Heber Doust Curtis) ஜூன் 27, 1872ல் மிச்சிகனில் பிறந்தார். இவரது தந்தையார் ஆர்சன் பிளேர் கர்டிசு. இவரது தாயார் சாரா எலிசா தவுசுட். கர்டிசு மிச்சிகன் பல்கலைக்கழகத்திலும் வர்ஜீனியா பல்கலைக்கழகத்திலும் படித்தார். இவர் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் வானியல் பட்டம் பெற்றார். இவர் இலிக் வான்காணகத்தில் 1902 முதல் 1920 வரை பணிபுரிந்தார். இவர் ஜேம்சு எட்வார்டு கீலர் அவர்களின் ஒண்முகில்களின் அளக்கையைத் தொடர்ந்தார். இவர் 1912ல் பசிபிக் வானியல் கழகத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கர்டிசு 1918ல் மெசியர் 87 பால்வெளியை நோக்கிக் கண்டறிந்தார். இவர் முதன்முதலாக, பால்வெளி முனைத்தாரையைக் கண்ணுற்றார். இதை இவர் “மெல்லிய பொருண்மக் கோட்டால் பால்வெளிக்கருவுடன் இணைந்த வியப்புமிக்க நீள்கதிர்க்கற்றை” என விவரித்தார்.

கர்டிசு 1920ல் அலெகனி வான்காணக இயக்குநராக அமர்த்தப்பட்டார். அதே ஆண்டில் இவர் ஆர்லோவ் சேப்ளே அவர்களுடன் ஒண்முகில்கள், பால்வெளிகளின் தன்மைபற்றியும் புடவியின் உருவளவு பற்றியும் நடந்த பெருவிவாதத்தில் பங்கேற்றார். இவர் தற்போது ஏற்கப்பட்டுள்ள பால்வெளிகள் பற்றிய கண்ணோட்டத்தை முன்மொழிந்தார். 1925ல் படலத் தட்டு ஒப்பீட்டளவியின் ஒரு வடிவமைப்பை புதிதாக உருவாக்கினர். இது ஒரே தடவையில் 8×10 சதுர அங்குல அளவுகொண்ட இரண்டு தட்டுகளை பட்டக அணிகளைப் பயன்படுத்தி, வழமானபடி தட்டுகளை அடுத்தடுத்து பக்கத்தில் வைக்காமல், அடுக்குகளாகச் சேர்த்துப் பின் உரிய திசைவைப்பில் இருத்தினார். இதனால் கருவியின் உடல் 60×51 செ.மீ பரப்பளவை அளக்க முடிந்துள்ளது. இந்தக் கருவி 2011 ஆகஸ்ட் வரை இலிக் வான்காணகத்தில் பொட்டலமாக்க் கட்டி வைக்கப்பட்டிருந்தது. இக்கருவி பற்றிய விவரிப்பு அலெகனி வான்காணக வெளியீடுகளில் தொகுதி எட்டு, பகுதி இரண்டில் வெளியிடப்பட்டது.

கர்டிசு 1930ல் மிச்சிகன் பல்கலைக்கழக வான்காணகங்களின் இயக்குநராக அமர்த்தப்பட்டார், என்றாலும் ஆன் ஆர்போரில் இவர் பல்கலைகழகத்துக்காக வடிவமைத்த பேரளவு ஒலித்தெறிப்புத் தொலைநோக்கியை கட்டியமைத்தல், பெரும்பொருளியல் சரிவின் நிதிப் பற்றாக்குறையால் தவிர்க்கப்பட்டது. இவர் மெக்மாத்-உல்பர்ட் தனையார் வான்காணகத்தை அங்கேலசு ஏரி எனுமிடத்தில் உருவாக்குவதில் பங்களித்துள்ளார். இவர் சூரிய ஒளிமறைப்புகளை ஆய்வு செய்ய, 11 வானியல் தேட்டங்களில் ஈடுபட்டார்.
அமெரிக்க வானியலாளர் ஏபர் தவுசுட் கர்டிசு ஜனவரி 9, 1942ல் தனது 69வது அகவையில் மிச்சிகன், அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply