Home செய்திகள்கீழக்கரை செய்திகள் அருப்புக்கோட்டையில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று..

அருப்புக்கோட்டையில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று..

by ஆசிரியர்

விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி சேர்ந்த அரசு 108 ஆம்புலன்ஸ் EMT கார்த்திக் செல்வம் என்பர் பந்தல்குடி 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் மெடிக்கல் டெக்னீசியன் ஆக பணியாற்றி வருகிறார்.  ஒரு வார காலமாக தொடர் காய்ச்சல் சளி காரணமாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கடந்த 23ந்தேதி சளி மற்றும் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில் சில தினம் முன் வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் மருத்துவ பரிசோதனை முடிவுகள்  வெளியானதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பந்தல்குடி அவரது இல்லத்திலிருந்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார்

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழக அரசு மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி அவர்களுக்கு நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

கரோனா வைரஸ் சிகிச்சையை வார்டில் பணியாற்றும் மருத்துவர் முதல் தூய்மைப் பணியாளர்கள் வரை பணி முடித்து அவர்கள் வீட்டிற்கு செல்லாமல் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தங்க இடவசதி உணவு அளித்து வரும் சூழலில் கரோனா வைரஸ் தொற்று உள்ள நோயாளிகளை ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து வருவதும் பூரண குணமடைந்த நோயாளிகளை அவர்களது இல்லத்தில் சென்று விடும் பெரும் பணியை செய்து வரும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகாரணங்கள் ஏதும் வழங்காமலும் அவர்களுக்கு தங்க இடவசதி வழங்காமலும் அரசு பாரபட்சம் காட்டுவது 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று பரவ காரணமாக அமைந்துள்ளதாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது

விபத்தில் மற்றும் மருத்துவ உதவிகள் தேவைப்படும் நபர்களை சிகிச்சைக்காக அவர்களை அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்க்கும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளருக்குகொரா வைரஸ். தொற்று பரவியது 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!