Home செய்திகள்கீழக்கரை செய்திகள் போக்குவரத்தில் சிரமம்.. தொழிலாளர்கள் வருவதில் சிக்கல்…பட்டாசு தயாரிப்பாளர்கள் கவலை..

போக்குவரத்தில் சிரமம்.. தொழிலாளர்கள் வருவதில் சிக்கல்…பட்டாசு தயாரிப்பாளர்கள் கவலை..

by ஆசிரியர்

விருதுநகர் மாவட்டத்தில் வைரஸ் தொற்று பரவல், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இருந்தாலும் கடந்த ஒன்றாம் தேதி முதல், மண்டலங்கள் அறிவிக்கப்பட்டு, போக்குவரத்துகள் துவங்கியது. இதனால் தொழில்கள் கொஞ்சம் கொஞ்சமாக சீராகத் தொடங்கியது. மாவட்டத்தின் பிரதான தொழிலாக பட்டாசுத் தொழில் உள்ளது.

விருதுநகர் மாவட்டம் மட்டுமல்லாமல், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலும் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. நேரிடையாக பட்டாசுத் தொழிலில் சுமார் இரண்டு லட்சம் பேர் வேலை பார்த்து வருகின்றனர். பொது போக்குவரத்து மண்டலங்களாக பிரித்த போதே, விருதுநகர் மாவட்டம் பாதிக்கப்பட்டது. மண்டலம் விட்டு மண்டலம் தொழிலாளர்களை அழைத்து வருவதில் பல்வேறு சிரமங்கள் இருந்தது. மண்டல எல்லை வரை ஒரு பேருந்திலும், மறுபக்க மண்டலத்திற்கு, இரண்டு கிலோ மீட்டர் நடந்துவந்து, மற்றொரு பேருந்து மூலமும் தொழிலாளர்கள் வேலைக்கு வந்து சென்றனர்.

இந்த நிலையில் மதுரையில் தொற்று எண்ணிக்கை அதிகரித்ததையொட்டி, அங்கு நேற்று முதல் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதே சமயம் விருதுநகரிலும் தொற்று அதிகரித்து வருவதையொட்டியும், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பேருந்துகள், மற்ற போக்குவரத்துகள் மாவட்டங்களுக்குள் மட்டும் இயங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. மற்ற மாவட்டங்களுக்குள் செல்ல உரிய காரணங்களுடன், இ-பாஸ் எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே போக்குவரத்தில், கடும் சிரமம் உள்ள நிலையில், இந்த இ-பாஸ் முறை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பட்டாசு ஆலைகளுக்கு வேலைக்கு வந்துகொண்டிருந்த தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலிருந்து வருவது மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த எழுபது நாட்களாக, வேலை வாய்ப்பை இழந்த தொழிலாளர்கள், மீண்டும் வேலைக்குச் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. பட்டாசு ஆலைகளுக்கு வேலைக்கு தொழிலாளர்கள் செல்ல முடியாத நிலையும்,

வெளிமாநிலங்களிலிருந்து பட்டாசு ஆர்டர்கள் வராமல் இருப்பதாலும், தயாரான பட்டாசுகளை வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியாததாலும், கடுமையான நிதி நெருக்கடியாலும், விருதுநகர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன. பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால், ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

இதே நிலை நீடித்தால் வரும்  ஜுலை ஒன்றாம் தேதியிலிருந்து, மாவட்டத்தில் உள்ள 1070′ பட்டாசு ஆலைகளும் என்று பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கவலையுடன் கூறினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!