Home செய்திகள்கீழக்கரை செய்திகள் சாத்தான்குளம் வியாபாரிகள் உயிரிழந்த சம்பவம்-கருப்புக்கொடி, சின்னம் மூலம் எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள்..

சாத்தான்குளம் வியாபாரிகள் உயிரிழந்த சம்பவம்-கருப்புக்கொடி, சின்னம் மூலம் எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள்..

by ஆசிரியர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு உத்தரவு நேரத்தை மீறி கூடுதலாக சில நிமிடங்கள் கடை திறந்ததால் போலீசாரின் தாக்குதலால் ஜெயராஜ் மற்றும் பென்னிஸன் என்ற இரு வியாபாரிகள் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், உரிய நீதி வழங்க வலியுறுத்தியும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தென்காசி மாவட்டம் சுரண்டையில் நேற்று வியாபாரிகள் சங்க தலைவர் காமராஜ் தலைமையில் செயலாளர் ஏடி நடராஜன், பொருளாளர் தனபால், துணை தலைவர் சிவசக்தி முத்தையா, நிர்வாக குழு துரைமுருகன், கடற்கரை நாடார், சுப்பிரமணியன், ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் எம்ஏ துரை, செயலாளர் ஜேக்கப், நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்க கூட்டமைப்பு தலைவர் எஸ் ஆர் சுடலைகாசி, நிர்வாகிகள் மாடசாமி உள்ளிட்ட அனைத்து வணிகர்கள் மற்றும் பணியாளர்கள் கருப்பு சின்னம் அணிந்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து இறந்த வணிகர்களுக்கு சுரண்டை வியாபாரிகள் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த சம்பவத்தை கண்டித்து வருகின்ற 26-06-2020 வெள்ளிக் கிழமை சுரண்டையில் முழு அடைப்பு போராட்டமும் வியாபாரிகள் நடத்த உள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!