Home செய்திகள் மதுரை நகரில் பல இடங்களில் சிறப்பு அதிகாரி ஆய்வு..

மதுரை நகரில் பல இடங்களில் சிறப்பு அதிகாரி ஆய்வு..

by ஆசிரியர்

மதுரை மாநகராட்சி கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் மரு.பி.சந்திரமோகன் புதன்கிழமை  ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாநகராட்சி கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் டி.ஜி. வினய் தலைமையில் ஆணையாளர்  .ச.விசாகன் முன்னிலையில், கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் (24.06.2020) ஆய்வு மேற்கொண்டார். மதுரை மாநகராட்சி கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளான செனாய்நகர்,  வடக்கு பெருமாள் மேஸ்திரி வீதி, பொன்மேனி மற்றும் காமராஜர் சாலை , குணவிலாஸ் சந்து ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீர் பொடி வைட்டமின் மாத்திரைகள்,  ஜிங்க் மாத்திரைகள் ஹோமியோபதி ஆர்சனிக் 30 ஆல்பம் தாளி சாளி சூரணம் ஆடாதோடா மணப்பாகு அடங்கிய மருந்து பெட்டகத்தினை பொதுமக்களுக்கு வழங்கி பேசும்போது தெரிவித்தாவது:

மதுரை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு 1. பொதுமக்கள் வெளியில் செல்லும் பொழுது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். 2.ஒருவருக்கொருவர் 6 அடி சமூக இடைவெளியினை கடைப்பிடிக்க வேண்டும். 3.கைகளை சோப்பு கொண்டு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். 4.மிக முக்கியமானது யாருக்கேனும்,  காய்ச்சல், சளி இருமல் ஏதேனும் நோய் அறிகுறி இருந்தாலே உடனடியாக மாநகராட்சியின் உதவி மையம் எண்.842 842 5000 என்ற எண்ணிற்கோ அல்லது காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாமிலோ உடனுக்குடன் 24 மணி நேரத்திற்குள் தெரிவித்து சிகிச்சை பெற வேண்டும். என்றார். இந்த ஆய்வின் போது,  நகரப்பொறியாளர் திரு.அரசு,  உதவி நகர்நல அலுவலர் மரு.வினோத்ராஜா, மக்கள் தொடர்பு அலுவலர் தங்கவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!