Home செய்திகள்கீழக்கரை செய்திகள் குற்ற சம்பவங்கள் தொடர்பாக காவல் துறை நடவடிக்கைகளை சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை..

குற்ற சம்பவங்கள் தொடர்பாக காவல் துறை நடவடிக்கைகளை சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை..

by ஆசிரியர்

இராமநாதபுரம் பஜார் காவல் போலீசில் 09.6.2020 ஆம் தேதி  பதிவான வழக்கில் நீதிமணி, ஆனந்த் ஆகியோர் 10.6.2020 ஆம் தேதி கைது செய்யப்பட்டு,  நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வழக்கில் பல கோடி ரூபாய் மோசடி தெரிய வந்ததையடுத்து, இவ்வழக்கு பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்ற ஏற்பாடு  செய்யப்பட்டது.

இந்நிலையில்,  நீதிமணி, ஆனந்த் மீது தொடர்  புகார்கள் வந்தன. இதன்படி  நீதிமணி, ஆனந்த் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து மோசடி தொடர்பாக விசாரித்து வாக்குமூலம் படி தமிழக டிஜிபி ஒப்புதல் பெற்று இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட உள்ளது.  நீதிமணியை  19.6.2020ல் போலீஸ் காவலில் எடுத்து 20.6.2020, 21.6.2020 தேதிகளில் விசாரித்து , வாக்குமூலம் படி  நீதிமணி, ஆனந்த் இருவரும் ஆன்கோயன் அசோசியேட்ஸ் மற்றும் புல்லியன் பின்டெக் எல்எல்பி என்ற பெயரில் நிதி நிறுவனங்கள் நடத்தி 500க்கும் மேற்பட்டோரிடம் முதலீடாக பெற்ற  கோடி கணக்கான பணத்தை தங்கள்  பெயரில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அசையும், அசையா சொத்துகள் வாங்கி  முதலீட்டாளர்களை ஏமாற்றியது தெரிய வந்தது.

விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நீதிமணி 22.6.2020 சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய ஆனந்த் என்பவரை நேற்று (23.6.2020) போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது.  இருவரிடமிருந்து சொத்து பத்திரங்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கோடி கணக்கான பணத்தை மோசடி  செய்த  நீதிமணி, ஆனந்த் மீது  குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது .  நீதிமணி தான் மோசடி செய்ததாக  மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரேத்யேக எண்ணை  தொடர்பு கொண்ட ஆனந்த் மீது வழக்கு  பதிவு செய்யும் முன் புகார் கூறினார். இதன் பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், துளசி மணிகண்டன்  அளித்த புகார்படி விசாரணைக்கு பின் இந்த  வழக்கில்  ஆனந்த் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.

இந்த மோசடி சம்பவத்தில் போலீசாரின் நடுநிலையான நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், விஷமிகள் சிலர் இந்த வழக்கின் புகார்தாரர்கள் மத்தியில்  குழப்பம் ஏற்படுத்த சூழ்ச்சி செய்து நீதிமணி, ஆனந்த் ஆகியோரை காப்பாற்றும் நோக்கில், வழக்கை  திசைதிருப்பும் முயற்சியில் பொய் தகவல்களை வேண்டும் என்றே சமூக வலைதளங்களில் திட்டமிட்டு  பரப்பி வருவதாக தெரிகிறது. இது போன்று சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பும்  விஷம நபர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண் குமார் எச்சரித்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!