அரசு கல்லூரி மாணவியர் விடுதியை கொரோனா பரிசோதனை மையமாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு..

அரசு கல்லூரி மாணவியர் விடுதியை கொரோனா பரிசோதனை மையமாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நென்மேனி சாலையில் அரசு கல்லூரி மாணவிகள் விடுதி உள்ளது. தற்போது கொரோனாவினால் விடுதி செயல்படவில்லை இந்நிலையில் மாவட்டத்தின்  அனைத்து பகுதிகளிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதனால் நகர் பகுதிகளில் கொரோனா பரிசோதனை மையங்களை அமைக்க உள்ளனர், நகராட்சி பணியாளர்கள் இன்று மாணவிகள் விடுதியை சுத்தம் படுத்தும் பணியினை ஆரம்பித்து செய்து கொண்டு இருந்தனர்.அப்போது அப்பகுதியில் குடியிருந்து வரும் பொதுமக்கள் பரிசோதனை மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் விடுதி முன்பு போராட்டம் நடத்தினர்.

அவர்களிடம் சாத்தூர் கோட்டாட்சியர் தாசில்தார் ஆகியோர்  பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாம் தொடர்ந்து கோஷம் எழுப்பி வந்ததால் பரபரப்பு நிலவியது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் டி.எஸ்.பி ராமகிருஷ்ணன் அவர்கள் போராட்டத்தில்  ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு நடத்தினார் சரவணா பரிசோதனை மையம் செயல்பட தடை விதிக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..