Home செய்திகள்கீழக்கரை செய்திகள் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளருக்கு பேட்டி…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளருக்கு பேட்டி…

by ஆசிரியர்

கொரோனா வைரஸிலிருந்து மக்களை காப்பாற்ற எடப்பாடி அவர்கள் எடுத்திருக்கும் நடவடிக்கைகளை எள்ளி கையாடும் பணியை ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். எடப்பாடி மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் தொடுத்தால் நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நரேந்திர மோடி எடுக்கும் நடவடிக்கைகளைகளுக்கு , எடப்பாடி அவர்கள் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து தமிழ்நாட்டு மக்களை சிப்பாயாக பாதுகாத்து வருகிறார். அடுத்த ஆட்சி கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிந்த ஸ்டாலின் கோபத்தின் வெளிப்பாடாக இந்த ஆட்சி மீது புழுதிவாரித் தூற்றுகிறார்.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் எதிர்க்கட்சிகள் இதுபோன்ற ஆளுங்கட்சி குறை சொல்லவில்லை. மற்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சிக்கு உறுதுணையாக இருந்து செயல் படுகின்றன. கடவுள் நம்பிக்கை இல்லாத ஸ்டாலின் கடவுள் நம்பிக்கை உள்ளவர் இழிவாகப் பேசுவது அதுவே அவரது தொழில்.

கிராம வழக்கப்படி கொரோனாவை கட்டுப்படுத்துவது இறைவன்தான் காப்பாற்ற வேண்டும் என தெரிவித்ததை கூட ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார். எதை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் என்ற நிலைப்பாட்டை ஸ்டாலின் நிறுத்தவேண்டும்.

ஸ்டாலின் விஷத்தை விதைக்கக் கூடாது அது பிற்காலத்தில் விர்சமாக வளர்ந்தால் நாடு என்னவாகும்? ஸ்டாலின் போடும் கணக்கு வரும் தேர்தலில் தவிடு பொடியாகிவிடும். தமிழகத்தில் முழு உரைடங்கு குறித்து முதல்வர் முடிவெடுப்பார். விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை . ரொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளது. வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்களால் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது.

பெட்ரோல் டீசல் உயர்வு என்பது உலகம் முழுவதும் நடக்க கூடிய பிரச்சனை. இந்த கொரோனா நேரத்தில் சில கஷ்டங்கள் நஷ்டங்கள் வரத்தான் செய்யும் அதை சரி செய்யும் பணியை எடப்பாடி ஆட்சி எடுத்து வருகிறது. பெட்ரோல் டீசல் உயர்வு குறைப்பது குறித்து மத்திய அரசிடம் எப்போது வலியுறுத்த வேண்டுமோ அப்போது வலியுறுத்துவோம்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!