Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மதுரையில் விஜய் ரசிகர்களும்.. அஜீத் ரசிகர்களும்.. இணைந்து கொண்டாடிய விஜய் பிறந்த நாள்..

மதுரையில் விஜய் ரசிகர்களும்.. அஜீத் ரசிகர்களும்.. இணைந்து கொண்டாடிய விஜய் பிறந்த நாள்..

by ஆசிரியர்

நடிகர் விஜய் பிறந்தநாள் நிகழ்ச்சியில் நிவாரணம் பெற வருபவர்களுக்கும், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருபவர்களுக்கும் தெர்மால் கருவி பரிசோதனை மூலம் சோதனை செய்யப்பட்டு சமூக இடைவெளியை சரியாக கடைபிடித்து நிகழ்ச்சியில் அனுமதித்தது மக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

மதுரை விஜய் வழக்கறிஞர் பிரிவு சார்பில் மதுரை காளவாசலில் வழிக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் சோலை.முத்து, சரவணன் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சியில் அஜீத் ரசிகர்கர்களுக்கும், ஏழை – எளிய பொது மக்களுக்கும் இலவசமாக அரிசி மற்றும் கல்வி உதவி தொகையினை மதுரை மாவட்ட விஜய் மன்ற தலைவர் தங்கப்பாண்டி வழங்கினார்.

விஜய் பிறந்த நாளில் அஜீத் ரசிகர்களுக்கும், ஏழை மக்கள் நிவாரண உதவிகளை கொரோணா தொற்று பரவாமலிருக்க அரசு அறிவித்துள்ள சமூக இடைவெளி விட்டு முக கவசம் அணிந்து கை உறை அணிந்து நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.

அரசு மற்றும் தனியார் அமைப்புகள் நிவாரண பொருள்கள் வழங்கும் நிகழ்வுகளில் கூட செய்யாத வகையில் இந்த விஜய் பிறந்த நாள் நிகழ்ச்சியில் நிவாரணம் பெற வருபவர்களுக்கும், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருபவர்களுக்கும் தெர்மால் கருவி பரிசோதனை மூலம் சோதனை செய்யப்பட்டு நிகழ்ச்சியில் அனுமதித்தது மக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருக்கும் விஜய் – அஜீத் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சண்டையிடுவதை தவிர்த்து மக்கள் பணியாற்றுவதை அறிவுறுத்தும் வண்ணமாக விஜய் – அஜீத் ரசிகர்களை இணைத்து இந்த நிவாரண உதவிகளை வழங்கினார்.

அதே போன்று விஜய் மக்கள் இயக்க மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ.பி.பி.பாண்டியன் தலைமையில்  மதுரை பீ பீ குளம் பகுதியில் உள்ள ராஜாஜி முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு மதிய உணவு, பிரட், முக கவசம், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. அதோடு முதியோர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்த இக்கட்டான நிலையில் மக்களுக்கு நற்பணி செய்வதை கருத்தில் கொள்ளாமல் சமூக வலைதளங்களில் சண்டையிடும் விஜய் – அஜீத் ரசிகர்கள் இது போன்ற நிகழ்வுகளால் சமூக வலைதளங்களில் சண்டையிட்டு நேரத்தை வீணடிக்காமல் முறையான அரசு விதிகளை கடைபிடித்து மக்கள் பணியாற்றுவதற்கு இது போன்ற நிகழ்வுகள் முன்னோடியாக திகழும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!