தென்காசி பகுதி மருத்துவ முகாம்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு…

தென்காசியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தென்காசி நகராட்சி மற்றும் பொது சுகாதாரத் துறை இணைந்து அமைக்கப்பட்டுள்ள கீழப்புலியூர் முத்தையா சொர்ணம்மாள் திருமண மண்டபம், தாய் சேய் நல விடுதி மற்றும் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெரு பூங்கா பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாம்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் ஆய்வு செய்தார்.

கீழப்புலியூர் முத்தையா சொர்ணம்மாள் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமினை ஆய்வு செய்து மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் அப்பகுதியில் வீடு வீடாக காய்ச்சல் கணக்கெடுப்பு மேற்கொள்பவர்களிடம் விசாரணை மேற்கொண்டதுடன், ஆக்ஸிஜன் அளவு பரிசோதனை மேற்கொள்ளப்படுவது குறித்து அறிவுரை வழங்கினார்.

மேலும் வேம்படி பள்ளிவாசல் பகுதி, புதுமனை 1-வது தெரு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதுடன் கிருமி நாசினி தெளித்தல், கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றுதல், தனி நபர்கள் கட்டாயம் முககவசம் அணிதல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என அறிவுரை கூறியதுடன் புதுமனை 1-வது தெரு பகுதியில் மருத்துவ முகாம் அமைக்க உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சித் தலைவருடன் துணை இயக்குநர் மற்றும் சுகாதார பணி டாக்டர்.கலுசிவலிங்கம், துணை இயக்குநர் தனி உதவியாளர் ரகுபதி, சுகாதார அலுவலர், முகமது இஸ்மாயில், துப்புரவு ஆய்வாளர் கைலாச சுந்தரம், மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..