Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தென்காசி மாவட்டத்தில் சென்னையிலிருந்து வந்த மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி-தடுப்பு பணிகள் தீவிரம்…

தென்காசி மாவட்டத்தில் சென்னையிலிருந்து வந்த மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி-தடுப்பு பணிகள் தீவிரம்…

by ஆசிரியர்

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. நெல்லை,தென்காசி பகுதிகளில் வெளியூரில் உள்ளவர்கள் தனது சொந்த ஊருக்கு திரும்புவதால் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகி வரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. காவல்துறையினர், வருவாய்த்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் பங்களாச் சுரண்டை வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்த, சென்னை திருவல்லிக்கேணியில் போலீசாக பணியாற்றி வரும் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது.

சென்னையில் குடும்பமாக வசித்து வந்த இவர் கடந்த 14-ஆம் தேதி சுரண்டைக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்துள்ளார். பின்னர் வருவாய்த் துறை மற்றும் சுகாதாரத்துறை உதவியுடன் 18-ஆம் தேதி கோரோனா பரிசோதனை மேற்கொண்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை இவருக்கும் இவரது 2 வயது மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீகேபுதூர் தாசில்தார் ஹரிஹரன் தலைமையில் வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார், சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி சுரண்டை டவுன் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி அரசப்பன், ஆர்ஐ மாரியப்பன் மற்றும் அதிகாரிகள் முகாமிட்டு சுகாதார பணிகளை தீவீரபடுத்தி கிருமிநாசினி தெளித்தனர். தெருக்கள் தடுப்பு கம்புகள் கொண்டு அடைக்கப்பட்டு உள்ளன.

அதே போன்று மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து டெய்லராக வேலை பார்த்து வந்த கீழச்சுரண்டையை சேர்ந்தவர் தனிமைப்படுத்தும் மையத்தில் இருந்த நிலையில் அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கும் சுகாதார பணிகளை தீவீரப்படுத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து 3 பேர்களையும் திருநெல்வேலி கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இப்பகுதியில் கொரோனா தடுப்பு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!