இளம்பெண்ணை கடத்திய வழக்கில் அமமுக நிர்வாகி கைது..

இராமநாதபுரம் மாவட்ட அமமுக., தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலர் கமுதி போஸ் செல்வா, 31. இவர் கமுதி பஸ் ஸ்டாண்டில் டீ டை நடத்துகிறார். இந்நிலையில் கடைக்கு வரும் வாடிக்கையாளரான ராணிபேட்டையை சேர்ந்தவரும் கமுதியில் வசித்து வரும் வடமலை மகன் சூர்யாவிடம் 25, நட்பு ஏற்பட்டது. இதையடுத்து ரயில்வேயில் உணவகம், டூவீலர் நிறுத்துமிட குத்தகை எடுத்து தருவதாக கூறி போஸ்செல்வாவிடம் சூர்யா ரூ.32 லட்சம் வாங்கியுள்ளார்.

கடந்த 6 மாதங்களாக எந்த கான்ட்ராக்ட் பெற்று தராததால், சூர்யாவிடம் போஸ்செல்வா பணத்தை திரும்ப கேட்டுள்ளார். பணத்தை திரும்ப கொடுக்காததால் சூர்யாவின் மனைவி துர்காவை 23, போஸ்செல்வா, இவரது நண்பர் பரமக்குடி மாரிசெல்வம் இருவரும் சேர்ந்து கடத்தி கமுதி பிள்ளையார்கோயில் தெருவில் உள்ள போஸ் செல்வா வீட்டில் அடைத்து வைத்தனர். இதுகுறித்து ராமநாதபுரம் எஸ்.பி., வருண்குமாருக்கு அலைபேசியில் சூர்யா புகார் கொடுத்தார். இதன் பேரில் போஸ்செல்வா, மாரிச்செல்வம் ஆகியோர் மீது ஆள் கடத்தல் வழக்கு பதிந்து போஸ்செல்வ, பணம் பெற்று ரயில்வேயில் குத்தகை எடுத்து தருவதாக ஏமாற்றியதாக, போஸ்செல்வா புகாரின் பேரில் சூர்யாவை கமுதி போலீசார் கைது செய்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..