Home செய்திகள் விருதுநகரில் பட்டாசு ஆலையில் பணியாற்றிய 7 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு: பணியில் ஈடுபடுத்திய ஆலைக்கு 1.50 லட்சம் அபராதம் விதிப்பு!

விருதுநகரில் பட்டாசு ஆலையில் பணியாற்றிய 7 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு: பணியில் ஈடுபடுத்திய ஆலைக்கு 1.50 லட்சம் அபராதம் விதிப்பு!

by Askar

விருதுநகரில் பட்டாசு ஆலையில் பணியாற்றிய 7 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்திய ஆலைக்கு 1.50லட்சம் அபராதம் விதித்து மாவட்ட தேசிய குழந்தைத் தொழிலாளர் அமைப்பு நடவடிக்கை!

விருதுநகர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மற்றும் ஹோட்டல்களில் 9 முதல் 14 வயதுடைய குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிவதைக் கண்டறிந்து அவர்களை மீட்டு கல்விபெறச் செய்யும் வகையில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் உத்தரவிட்டார்.

அதையடுத்து, மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகள், ஆலைகள் மற்றும் நிறுவனங்களில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் சித்ரா, உதவி இயக்குநர் சீனிவாசன், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் நாராயணசாமி மற்றும் சிவகாசி தொழிலக பாதுகாப்பு மருத்துவர் சுகுமாரன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் விருதுநகர் அருகில் இயங்கி வரும் தனியார்க்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 14 வயதுக்கு உட்பட்ட 3 வளர் இளம் பெண்கள் உள்பட 7 குழந்தைகள் பணிபுரிந்தது கண்டறியப்பட்டு அவர்கள் மீட்கப்பட்டனர் இதை அடுத்து நடத்த விசாரணையில் குழந்தைகள் விருதுநகர் மாவட்ட சிவகாசி சாத்தூர் ஆர். ஆர் நகர் பகுதியை சேர்த்தவர்கள் எனவும் தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் குழந்தைகள் விடுமுறையில் பணிக்கு வந்ததும் கண்டறியப்பட்டது.

இதை அடுத்து சிறுவர்களை பணிக்கு அமர்த்திய ஆலை நிறுவனத்திற்க்கு 1 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்து தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் நாராயணசாமி நடவடிக்கை எடுத்தார்.

மேலும் குழந்தைகளை பணிக்கு அனுப்பிய பெற்றோர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.

  செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!