ஒரிசாவை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலார்கள் 963 பேர் விருதுநகர் இரயில் நிலையத்திலிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்..

ஒரிசாவை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலார்கள் 963 பேர் விருதுநகர் இரயில் நிலையத்திலிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்..

இந்தியா முழுவதும் கடந்த 60 நாட்களுக்கு மேலாக கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 5ம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் நாடு பல்வேறு பகுதியில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையின்றி மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்ப மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் இது வரை 3 கட்டமாக 1600 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில் முலம் பிகார், உத்திரபிரதேசம், பாட்னா போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து இன்று 4 ஆம் கட்டமாக தனியார் ஆலைகள், சாலையோரம் வியாபாரம் செய்து வந்த தென்மண்டலத்தை சேர்ந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் விருதுநகர் 308, திண்டுக்கல் 44, இராமநாதபுரம் 293, சிவகங்கை 20, தூத்துக்குடி 86, கன்னியாகுமரி 84, மேலும் திருநெல்வேலி மற்றும் மதுரை உட்பட மொத்தமாக 963 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விருதுநகர் ரயில் நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.

முன்னதாக இத்தொழிலாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்களுக்கு தேவையான உணவு, கிருமி நாசினி, முகக் கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

செய்தியாளர்,வி. காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..