Home செய்திகள் சுரண்டை தனியார் மருத்துவமனையில் மீண்டும் கொரோனா தொற்று-தாசில்தார் தலைமையில் தடுப்பு பணிகள் தீவிரம்..

சுரண்டை தனியார் மருத்துவமனையில் மீண்டும் கொரோனா தொற்று-தாசில்தார் தலைமையில் தடுப்பு பணிகள் தீவிரம்..

by Askar

சுரண்டை தனியார் மருத்துவமனையில் மீண்டும் கொரோனா தொற்று-தாசில்தார் தலைமையில் தடுப்பு பணிகள் தீவிரம்..

சுரண்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனை மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் சுரண்டை-சேர்ந்தமரம் பிரதான சாலையில் தனியார் இதய நோய் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக மருத்துவமனை மூடப்பட்டது‌.

செங்கோட்டையை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி தெரிந்ததையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரித்த போது அவர் சுரண்டை-சேர்ந்தமரம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது தெரியவந்தது.

இத்தகவல் வீகேபுதூர் தாசில்தார் ஹரிஹரன், சுகாதாரதுறை, பேரூராட்சி  மற்றும் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதிகாரிகள் விரைந்து சென்று உள்நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்து 15 நாட்களுக்கு மருத்துவமனையை மூட உத்தரவிட்டனர்.

மேலும், சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் மருத்துவமனை வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

ஏற்கனவே முன்னதாக இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காளத்திமடத்தை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டு மருத்துவமனை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!