மூத்த பத்திரிகையாளர் சாதிக் பாட்சா மீது கொலை வெறி தாக்குதல் “சத்திய பாதை” இதழ் கடும் கண்டனம்!

மூத்த பத்திரிகையாளர் சாதிக் பாட்சா மீது கொலை வெறி தாக்குதல் “சத்திய பாதை” இதழ் கடும் கண்டனம்!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சார்ந்தவர் சாதிக் பாட்சா, இவர் சுமார் 15 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றி வருகின்றார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெரியகுளம் கைலாசபட்டி பகுதியில் உள்ள பாப்பியபட்டி கண்மாயில் விவசாயப் பயன்பாட்டிற்கு என்றுஅரசு அனுமதி என்ற பெயரில் மணல் அள்ளி சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்துவதாக வந்த தகவலின் அடிப்படையில் செய்தி சேகரிக்க சென்று புகைப்படம் எடுத்த நிருபர் சாதிக் பாட்ஷா மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சமூக விரோத கும்பலை “சத்திய பாதை” இதழ் இதழ் வண்மையாக கண்டிக்கிறது .

சமூக விரோத கும்பலால் தாக்கபட்ட சாதிக் பாட்ஷா அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் சாதிக் பாட்ஷா கூறும்போது, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போய் திரும்பி வரும் போது பின் தொடர்ந்து இரண்டு மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் வந்து என் மீது சரமாரியாக தாக்கினார்கள் குறிப்பாக தாக்கிய நபர்கள் ஓ. ராஜாவை அடிக்கடி வம்புக்கு இழுக்கிறியா நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா என்று சொல்லி தாக்கியதாக அவர் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

ஆகயினால் காவல் துறையினர் இச்சம்பவத்தின் உண்மை காரணத்தை கண்டறிய தீவிர விசாரணை செய்து இந்த கொலை வெறி தாக்குதலில் சம்பந்த பட்ட அனைவர் மீதும் எவ்வித பாரபட்சம் பார்க்காமல் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என “சத்திய பாதை” இதழ் வலியுறுத்துகிறது.

தமிழகத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் படு கொலைகள் இது போன்ற சம்பவங்கள் தொடர் கதையாக நடை பெற்று வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

மேலும் பத்திரிக்கையாளுக்கு எந்த வித அச்சம் இல்லாமல் சுதந்திரமாக செய்திகளை சேகரிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

நிருபர் சாதிக் பாட்ஷா மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதி கும்பலை காவல் துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என “சத்திய பாதை” இதழின் சார்பாக தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image