நெல்லையில் பிரபல நகை கடைக்கு சீல்-மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…

நெல்லையில் பிரபல நகை கடைக்கு சீல்-மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.கொரோனாவை தடுக்க அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், திருநெல்வேலி டவுண் பகுதியில் இயங்கிவரும் பிரபல தனியார் நகை கடையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த கடையில் பணிபுரிந்த 32 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 2 பெண்கள் உட்பட 6 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த நகை கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்த நகைகடையில் முறையான பாதுகாப்பு அம்சங்கள் அந்த கடையில் மேற்கொள்ளப்படவில்லை என்றும்,முறையான பரிசோதனைகள் எதுவும் செய்யப்படவில்லை எனவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் கடை முழுவதும் கிருமிநாசினி கொண்டு தொற்று நீக்கம் செய்யப்படவில்லை எனவும், தங்கும் அறைகள் முறையாக தொற்று நீக்கம் செய்யப்படவில்லை என்பதாக காரணம் காட்டி மாநகராட்சி நிர்வாகம் வருகிற 15-ஆம் தேதி வரை கடையை மூட உத்தரவிட்டு உள்ளது.

இதற்கான அறிவிப்பையும் தனியார் நகைக்கடை முன்பு மாநாகராட்சி அதிகாரிகள் ஒட்டினர் . மேலும் தனியார் நகைக்கடையை சுற்றியுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கொரோனா தடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..