செங்கத்தில் புகார்கள் அல்லது கூட்டமாகவோ இருந்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்:தாசில்தார் ஏ.எஸ்.பார்த்தசாரதி எச்சரிக்கை.!

செங்கத்தில் புகார்கள் அல்லது கூட்டமாகவோ இருந்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்:தாசில்தார் ஏ.எஸ்.பார்த்தசாரதி எச்சரிக்கை.!

செங்கம் நகரில் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகள் திறக்கலாம் என்று செங்கம் தாசில்தார் ஏ.எஸ்.பார்த்தசாரதி தெரிவித்தார்.

செங்கம் நகரில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு கடைகள் செயல்படத் தொடங்கியது இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் வணிக நிறுவனங்கள் கடைகள் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

செங்கம் நகரில் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் திறக்கலாம்.

வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்கள் கண்டிப்பாக மாற்றம் அணிந்திருக்கும் வேண்டும். கை கழுவும் திரவம் வைத்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு கைகழுவ திரவம் அளிக்க வேண்டும்.

முக கவசம் அணியாமல் வணிகம் செய்யக்கூடாது  மேலும் சமூக இடைவெளியுடன் வணிகம் செய்ய வேண்டும்.

ஏதேனும் புகார்கள் வந்தால் அல்லது கூட்டமாக கடைகள் இருந்தால் தக்க நடவடிக்கை எடுத்து கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று வட்டாட்சியர் தெரிவித்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..