Home செய்திகள் அச்சத்தில் அச்சகங்கள்! பள்ளிகள், கல்லூரிகளுக்கான நோட்டுகள் தயாராகியும் விற்பனை இல்லை! சிவகாசியில் சுமார் 150′ கோடி ரூபாய் முடக்கம்.!

அச்சத்தில் அச்சகங்கள்! பள்ளிகள், கல்லூரிகளுக்கான நோட்டுகள் தயாராகியும் விற்பனை இல்லை! சிவகாசியில் சுமார் 150′ கோடி ரூபாய் முடக்கம்.!

by Askar

அச்சத்தில் அச்சகங்கள்! பள்ளிகள், கல்லூரிகளுக்கான நோட்டுகள் தயாராகியும் விற்பனை இல்லை! சிவகாசியில் சுமார் 150′ கோடி ரூபாய் முடக்கம்.!

கொரோனா வைரஸ் பாதிப்பு பல நாடுகளின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்துள்ளது குறிப்பாக  தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பட்டாசுக்கு மட்டுமல்லாமல், பள்ளி கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான நோட்டுகள் தயாரிப்பிலும் முன்னணியில் உள்ளது.

சிவகாசியில் தயாரிக்கப்படும் நோட்டுகள் தரமிக்கதாக இருப்பதால் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான ஆர்டர்கள் கிடைத்து வந்தன.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் ஜுன் மாதம் வரை நோட்டுகள் தயாரிக்கும் பணிகள் சிவகாசியில் நடைபெறும். இங்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட பெரிய அச்சகங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய அச்சகங்களில் நோட்டுகள் தயாரிக்கப்படும். மற்றும் நோட்டுகள் பைண்டிங் செய்யவும், லெமினேஷன், கட்டிங் உள்ளிட்ட சிறிய நிறுவனங்களும் நூற்றுக்கும் மேல், நோட்டுத் தயாரிப்பில் ஈடுபடுவார்கள்.

கடந்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப் பட்டதால், நோட்டுகள் தயாரிக்க முக்கியத் தேவையான பேப்பர் ரோல்கள், ஆந்திரா மற்றும் புதுச்சேரியிலிருந்து கொண்டு வருவதில் பெரும் சிரமம் இருந்தது. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் நிலைமை கொஞ்சம் சரியானது.

அச்சகங்களுக்குத் தேவையான பேப்பர் ரோல்கள் வரத்து இருந்ததால், நோட்டுகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. கிட்டத்தட்ட 80′ சதவிகித நோட்டுகள் விற்பனைக்கு தயாராகிவிட்டது.

இந்த நிலையில் வைரஸ் தொற்று அதிகரிப்பின் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவது எப்போது என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதற்கு முன்பாகவே தங்களுக்கு தேவைப்படும் நோட்டுகளை மொத்தமாக ஆர்டர்கள் கொடுத்து, அதற்கான பணத்தையும் நிறுவனங்களுக்கு கொடுத்து விடுவார்கள். ஏப்ரல், மே மாதங்கள் பள்ளிகளுக்கும், ஜுன், ஜுலை மாதங்களில் கல்லூரிகளுக்கும் நோட்டுகள் சப்ளை செய்யப்படும். மேலும் அனைத்து ஸ்டேசனரி கடைகளுக்கும் நோட்டுகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்.

தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என தெரியாததால், யாரும் நோட்டுகள் ஆர்டர்கள் கொடுக்கவில்லை. சில பெரிய அளவிலான சில பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமே குறைந்த அளவில் ஆர்டர்கள் கொடுத்திருப்பதாக அச்சக நிறுவனங்கள் கூறுகின்றன.

இது குறித்து நோட்டுகள் தயாரிப்பாளர் பழனிசெல்வராஜ் கூறியது, பள்ளிகள், கல்லூரிகளுக்குத் தேவையான 80’பக்கம்,160’பக்கம், ரெகுலர் சைஸ், லாங்சைஸ், கோடு போட்டது, கோடு போடாதது, இரண்டு கோடு, நான்கு கோடு கையெழுத்து பழக்க நோட்டு, அக்கவுண்டன்சி நோட், ப்ராக்டிக்கல் நோட்டு, இன்ஜினியரிங் நோட்டு என பல ரகங்களில் நோட்டுகள் தயாரிக்கும் பணிகள் பெரும்பாலும் முடிந்து விட்டது. நோட்டுகள் விற்பனை செய்யும் ஏஜெண்ட்களிடமிருந்தும் நிறைய ஆர்டர்கள் வரும். ஆனால் இது வரை சொல்லிக் கொள்வது போல ஆர்டர்கள் வரவில்லை.

சிவகாசியில் மட்டும் சுமார் 150′ கோடிக்கு நோட்டுகள் விற்பனையாகும். இதே அளவு சென்னையிலும் நோட்டுகள் தயாரிப்பு மற்றும் விற்பனையும் நடைபெறும்.

சென்னையில் தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதால் அங்கு தயாரிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இந்த கல்வி ஆண்டு என்று துவங்குமோ அன்று தான் தேக்கத்தில் இருக்கும் நோட்டுகள் விற்பனையாகும். தயாரிக்கப்பட்ட நோட்டுகளை விற்க முடியாத நிலை இருப்பதால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிவகாசி, நோட்டு தயாரிக்கும் அச்சகங்கள் இருப்பதாக கூறினார்.

நோட்டு விற்பனையாளர் சாலைபழனி கூறும்போது, பள்ளிகள் திறக்காததால் நோட்டு வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பேப்பர் விலை, தொழிலாளர்கள் கூலி உயர்வு, மூலப் பொருள்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் இந்த ஆண்டு நோட்டுகள் விலை 10’சதவிகிதம் முதல் 15′ சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.

முதலீடு செய்து நோட்டுகள் இருப்பு வைத்திருந்தாலும் என்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுமோ அன்று தான் வியாபாரம் நடைபெறும் என்று கூறினார்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!