Home செய்திகள் திருச்சுழி மற்றும் காரியாபட்டி தாலுகாக்களில் ரூ,10 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகள் குறித்து தமிழக அரசின் சிறப்பு தலைமை செயற்பொறியாளர் ஆய்வு!

திருச்சுழி மற்றும் காரியாபட்டி தாலுகாக்களில் ரூ,10 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகள் குறித்து தமிழக அரசின் சிறப்பு தலைமை செயற்பொறியாளர் ஆய்வு!

by Askar

திருச்சுழி மற்றும் காரியாபட்டி தாலுகாக்களில் ரூ,10 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகள் குறித்து தமிழக அரசின் சிறப்பு தலைமை செயற்பொறியாளர் ஆய்வு!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் காரியாபட்டி தாலுகாக்களில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை தமிழக அரசின் சிறப்பு தலைமை செயற்பொறியாளர் ஞானசேகரன் ஆய்வு செய்தார்.

திருச்சுழி தாலுகாவில் ஆனைக்குளம், கொட்டக் காச்சியேந்தல்,கணையமறித்தான்,எசலி மற்றும் காரியாபட்டி தாலுகாவில் அல்லாலப்பேரி ஆகிய பகுதிகளில் உள்ள கண்மாய்களில் 2020-21ம் ஆண்டு தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ4.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை தமிழக அரசின் சிறப்பு தலைமை செயற்பொறியாளர் ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து, காரியாபட்டி அருகே ஏரிகள் பழுது மற்றும் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.4.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நடைபெற்று வரும் கம்பிக்குடி, சத்திரப்புளியங்குளம் இணைப்புக் கால்வாய் பணிகளையும் செயற்பொறியாளர் ஆய்வு செய்தார்.

மேலும், குடிமராமத்துப் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கிய தலைமை செயற்பொறியாளர் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்தக் குடிமராமத்துப் பணிகள் மூலம் திருச்சுழி மற்றும் காரியாபட்டி தாலுகாவில் சுமார் 1700 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வன், உதவி செயற்பொறியாளர்கள் நிறைமதி, கண்ணன்,மாயன், காரியாபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அதிமுக கவுன்சிலர் தோப்பூர் முருகன் மற்றும் அந்தந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.

கண்மாய் குடிமராமத்துப் பணிகளுக்காக சுமார் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கும், அரசுக்கும் திருச்சுழி மற்றும் காரியாபட்டி தாலுகா கண்மாய் பாசன விவசாயிகள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!