பாலக்கோட்டில் புதிதாக கட்டப்பட்ட வாகன ஆய்வாளர் அலுவலகம் திறப்பு விழா!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சித்திரப்பட்டியில் 1.53 கோடியில் புதிதாக கட்டப்பட்ட போக்குவரத்துத்துறை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து  தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி குத்துவிளக்குயேற்றி ரப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை போக்குவரத்து ஆணையர் நெல்லையப்பரன் தலைமை வகித்தார், தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன்,மோட்டார் வாகன ஆய்வாளர் முனுசாமி,பன்னீர்செல்வம்,மணிமாறன்,அன்புசெல்வன், மற்றும் அலுவலக ஊழியர்கள் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொன்டனர்.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image