சேமிப்பு கிடங்கும் இல்லை, போதிய விலையும் இல்லை, நெல்ககளை சாலையில் கொட்டி வைத்து பாதுகாக்கும் அவலம்..!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 5000 ஏக்கருக்கு மேலாக நெல் பயிரிடப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

அதில் குறிப்பாக இராஜபாளையம் நகர் பகுதிகளான கொண்ட நேரி கண்மாய் , கடம்பன் குளம் கண்மாய் , பெரியகுளம் கண்மாய் , என பல்வேறு கண்மாய்களை உள்ளடக்கிய பாசன விவசாய நிலங்களில் நெற்பயிர்கள் அதிகமாக பயிரிடப்பட்டு தற்போது அறுவடை செய்யப்பட்டு உள்ள நிலையில் இராஜபாளையம் தென்காசி சாலை பெரிய மாரியம்மன் கோவில் பகுதியில் இயங்கி வந்த நெல் சேமிப்பு கிடங்கு மூடப்பட்டுள்ள நிலையில் அதற்கு மாற்று ஏற்பாடாக வேறு இடத்தை அதிகாரிகள் இன்னும் தேர்வு செய்யாமல் அலட்சியம் காண்பித்து வருவதால்,

நெல்களை சேமிக்க முடியாமல் விவசாயிகள் சாலை ஓரங்களில்  போட்டு தார்பாய்கள் மூலம் மூடி பாதுகாத்து வருகின்றனர்.

இது குறித்து விவசாயி முருகன் என்பவர் கூறும்போது இந்தப் பகுதியில் நெல் அதிகளவில் பயிரிடப்படுகிறது இந்தப் பகுதியில் நெல் களஞ்சியங்கள் இல்லை நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லை ஆகையால் விவசாயிகள் மிகவும் சிரமப் படுவதாகவும் கூறுகினர்.

கடந்த ஆண்டு ஒரு ஏக்கருக்கு 27 ரூபாய் செலவு செய்த போதும் 28000 ,30000 ஆயிரம் என வருமானம் கிடைத்தது ஆனால் இந்த ஆண்டு போதிய விலை இல்லை வியாபாரிகளும் கொள்முதல் செய்ய வரவுமில்லை விளைவித்த நெல்கலை சேமிப்பு கிடங்கில் வைப்பதற்கு சேமிப்பு கிடங்கு செயல்படவில்லை ஆகையால் சாலைகளில் நெல்களை போட்டு மிகுந்த சிரமத்தில் உள்ளதாகவும் அரசு நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டுமெனவும் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..