Home செய்திகள் சதுரகிரி மலைக்குள் நுழைந்து செடி கொடிகளை வெட்டி மூலிகை நீர் என கூறி அதை வீடியோவாக வெளியிட்ட 2 பேர் கைது; வனத்திற்குள் இனி நுழைய மாட்டோம் எனக் கூறி தோப்பு கரணம் போட்டுக் கொண்ட பரிதாபம்!

சதுரகிரி மலைக்குள் நுழைந்து செடி கொடிகளை வெட்டி மூலிகை நீர் என கூறி அதை வீடியோவாக வெளியிட்ட 2 பேர் கைது; வனத்திற்குள் இனி நுழைய மாட்டோம் எனக் கூறி தோப்பு கரணம் போட்டுக் கொண்ட பரிதாபம்!

by Askar

ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலைக்குள் அத்துமீறி நுழைந்து செடி கொடிகளை வெட்டி மூலிகை நீர் என கூறி அதை வீடியோவாக வெளியிட்ட 2 பேர் கைது. இனி வனத்திற்குள் நுழைய மாட்டோம் என கூறி தோப்பு கரணம் போட வைத்து நூதன தண்டனை வழங்கிய வனத்துறையினர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரம் மகாலிங்கம் கோயில்.தற்போது இந்த கோயிலானது கொரனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த 2 மாதத்திற்கு மேலாக பக்தர்கள் செல்ல தடை விதித்து மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சதுரகிரி மலை காப்பு காட்டில் அத்துமீறி நுழைந்து நீர் கொடிகளை வெட்டி நீர் அருந்தி அதை வீடியோவாக வெளியிட்ட விருதுநகர் மாவட்டம் தைலாபுரம் கிராமத்தை சேர்ந்த நாகராஜ், மற்றும் மதுரை மாட்டம் பேரையூரை சேர்ந்த ஒருவரையும்  வன உயிரின காப்பாளர் முகம்மது சபாப்  அறிவுறுத்தலின்படி சாப்டூர் வனச்சரக சாப்டூர் வனத்துறையினர்  கைது செய்து,  தலா ரூபாய் 5,000 ரூபாய் வீதம் மொத்தம் 10,000 போய் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் வனத்திற்குள் அத்துமீறி நுழைய மாட்டோம் என தோப்புக்கரணம் போட வைத்து நூதன தண்டனை வழங்கிய வனத்துறையினர் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!