Home செய்திகள் கள்ளச்சாராயம் விற்பனை பல முறை எச்சரித்தும் கேட்க வில்லை, கடைசியில் குண்டர் சட்டத்தில் கைது:

கள்ளச்சாராயம் விற்பனை பல முறை எச்சரித்தும் கேட்க வில்லை, கடைசியில் குண்டர் சட்டத்தில் கைது:

by Askar

கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை காவலர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜமுனாமரத்தூர் தாலுக்கா குனிகாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோபால் மகன் முருகன் (35) என்பவர் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவரை காவலர்கள் கைது செய்து பலமுறை எச்சரித்தும் மீண்டும் கள்ளச்சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார்.

ஆகவே காவலர்கள் அவரின் சட்டவிரோத செயலை கட்டுப்படுத்த வேண்டி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆகியோருக்கு பரிந்துரை செய்திருந்தனர்.

இதையடுத்துமாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவின்படி காவல்துறையினர் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர் ஏற்கனவே மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், குண்டர் தடுப்புசட்டத்தில் இதுவரை 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!