Home செய்திகள் நல்ல ஆலோசனையை நல்ல எண்ணத்துடன் யார் கூறினாலும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும்:-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

நல்ல ஆலோசனையை நல்ல எண்ணத்துடன் யார் கூறினாலும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும்:-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

by Askar

நல்ல ஆலோசனையை நல்ல எண்ணத்துடன் யார் கூறினாலும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும்:-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டமன்ற அரங்கில் மாவட்ட ஆட்சியர் கண்ணன் முன்னிலையில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில், விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் வழங்கல் பணிகள் குறித்த அரசு அலுவலர்கள், குடிநீர் வழங்கல் பணி அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதிருக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகள், 9 பே௫ராட்சிகள் மற்றும் 11 ஒன்றியங்களில் குறிப்பிட்ட எந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது என்றும், மாவட்டத்தில் நாள்தோறும் மக்களின் தண்ணீர் தேவை எவ்வளவு என்றும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் செயல்படும் 6 திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, மக்களுக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

பின்னர்செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மாவட்டத்தில் 450 ஊராட்சிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு கட்டுக்குள் உள்ளது என்றும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் 6 மற்றும் உள்ளூர் கூட்டுக்குடிநீர் திட்டம் 8 ஆகியவற்றின் மூலம் 7 நகராட்சிகள் 9 பே௫ராட்சிகள் ஆகியவற்றிற்கு போதுமான தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றார். தொடர்ந்து பேசியவர் கொரோனா நடவடிக்கைகளுக்கு நல்ல ஆலோசனனை நல்ல எண்ணத்துடன் யார் கூறினாலும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் மேலும்,

இந்தியாவில் பிறந்த அனைவரும் எந்த ஒரு திட்டத்தை பாராட்டி பேசவும் விமர்சனம் செய்யும் உரிமை உண்டு என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என கூறினார்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!