Home செய்திகள் பழனி கோவில் அர்ச்சக ஸ்தானிகர்கள் மற்றும்‌ 64அயன்மிராஸ் பண்டாரங்களுக்கு கர்நாடக மாநிலம் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் மடாதிபதி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது..

பழனி கோவில் அர்ச்சக ஸ்தானிகர்கள் மற்றும்‌ 64அயன்மிராஸ் பண்டாரங்களுக்கு கர்நாடக மாநிலம் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் மடாதிபதி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது..

by Askar

பழனி கோவில் அர்ச்சக ஸ்தானிகர்கள் மற்றும்‌ 64அயன்மிராஸ் பண்டாரங்களுக்கு கர்நாடக மாநிலம் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் மடாதிபதி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது..

கொரோனா தொற்று காரணமாக பழனி முருகன் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பழனிகோவில் மற்றும் உபகோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பண்டாரங்கள் ஆகியோர் வருமானமின்றி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பழனி, ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் ஆகிய கோவில் கருவறைக்குள் நுழைந்து மூலவருக்கு பூஜை செய்யும் உரிமை கொண்ட கர்நாடக மாநிலம் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் சங்கராச்சாரியார் மடத்தின் சார்பில், பழனி கோவிலில் பணிபுரியும் அர்ச்சக ஸ்தானிகர்கள் மற்றும்‌ 64அயன்மிராஸ் பண்டாரங்கள்‌ ஆகியோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. பழனி தெற்கு ரதவீதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழாநாடு பிராமணர் சங்க தலைவர் ஹரிஹரமுத்து கலந்துகொண்டு இருநூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பழனி வட்டாட்சியர் பழனிச்சாமி, பழனி நகர காவல் ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!