Home செய்திகள் எந்த ஆவணமும் இல்லாமல் கூட்டுறவு வங்கிகளில் கடன் கேட்டால் எப்படி, !!! அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம்

எந்த ஆவணமும் இல்லாமல் கூட்டுறவு வங்கிகளில் கடன் கேட்டால் எப்படி, !!! அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம்

by mohan

கொரானா வைரஸ் தொற்று எதிரொலியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் மதுரையில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நாட்டுப்புறக்கலைஞர்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ  கோரிப்பாளையத்தில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் ,அரிசி பருப்பு உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட நாட்டுபுறக்கலைஞர்களுக்கு நிவாரணப்பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.அதனையடுத்து அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து பேசுகையில், கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் 50,000ரூபாய் கடனுக்கான அரசாணை ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. கூட்டுறவு வங்கிகள் மூலம் கிட்டத்தட்ட1952 கோடி ரூபாய் அளவுக்கு பொதுமக்களுக்கு கடன் கொடுக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கியில் கடன் பெற குடும்ப அட்டையே போதும், மேலும் சிறு குறு வியாபாரிகளாக இருந்தால் போதும் அவர்களுக்கு கடன் வழங்கப்படும்.கூட்டுறவு வங்கியில் கடன் இல்லையென்று சொன்னால் நான் நடவடிக்கை எடுக்கிறேன். 56000 கோடி டெபாசிட் கூட்டுறவு வங்கிகளில் உள்ளது. பொதுமக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே முதலமைச்சர் பொதுமக்களுக்கு வழங்கும் கடன் தொகையை அதிகரிக்க உத்தரவிட்டார்.சிலர் எந்த ஆவணமும் இல்லாமல் கூட்டுறவு வங்கிகளில் கடன் கேட்டது விசாரணையில் தெரிய வந்தது. எந்த ஆவணமும் இல்லாமல் கூட்டுறவு வங்கிகளில் கடன் கேட்டால் எப்படி கொடுக்க முடியும்.

நியாயவிலைக்கடைகளில் குறைவாக அரிசி வழங்கினால், அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது நல்ல விஷயம் தான்.பொதுமக்களுக்கு நல்ல தரமான அரிசியை கொள்முதல் செய்து கொடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மதுரையில் மட்டுமல்ல மாவட்டங்களில் உள்ள எல்லா கடைகளிலும் நல்ல தரமான,அரிசி வழங்கப்படும். நானே எல்லாக்கடைகளுக்கும் சென்று ஆய்வு நடத்த தயாராக உள்ளேன். அரிசி சரியில்லை என்றால் எனக்கு தகவல் கொடுத்தால் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். நியாய விலைக்கடைகளில் தவறு எதுவும் நடக்காது என கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!