Home செய்திகள் சரவண பொய்கை குளத்தை தூர்வாரி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

சரவண பொய்கை குளத்தை தூர்வாரி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

by mohan

ஆறுபடை வீடுகளில் முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்குள்ள சரவணப்பொய்கையில் 4 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும். தற்போது கோடை காலம் என்பதால் நீர் வற்றி காணப்படுகிறது. மேலும் சமூக விரோதிகள் சரவண பொய்கை படிக்கட்டுகளில் மது அருந்தி திறந்தவெளி பாராக பயன்படுத்துகின்றனர் .மேலும்  பொதுமக்கள் சோப்பு போட்டு துணி துவைப்பதும் சிறுவர்கள் ஆபத்தான முறையில் நீரில் குளிப்பதும் அதனால் உயிர்பலி ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. பலர் இதில் உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கதாகும் .

ஏற்கனவே சரவணபொய்கை மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் மீன்கள் இறந்து விடுகின்றன .மேலும் பல ஆண்டுகளாக சரவணப் பொய்கை தூர்வாரப்படாமல் இருப்பதால் மீன்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் மீன்கள் இறப்பதற்கு காரணமாக அமைகிறது.இது குறித்து பல்வேறு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோவில் நிர்வாகத்திடம் புகார் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத் தேர்தலின்போது தேர்தல் தேதி அறிவிக்கும் சில நாட்களுக்கு முன் வேறு அளவிற்கு தண்ணீரை சுத்தம் செய்வதாக சொல்லி பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிலையம் மும்பையில் இருந்து வந்ததாக சொல்லி ஒரு மோட்டார் பொருத்தி தண்ணீரை சுத்திகரித்து செய்வதாக தமிழக அரசு மற்றும் கோவில் நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் தொடங்கி வைத்தது. ஆனால் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியடைந்த காரணத்தினால் எதிர்கட்சி வெற்றிபெற்ற காரணத்தினாலும் இத்திட்டம் கிடப்பில் போட்டு உள்ளதாகவும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சரவண பொய்கை தற்போதுகண்டுகொள்ளவில்லை எனவும் நீர் வற்றிய நிலையில் காணப்படும் சூழ்நிலையில் உள்ளது. சரவணப் பொய்கையை தூர்வாரி சமூகவிரோதிகள் சரவணப்பொய்கையில் அரசியல் பாகுபாடு காட்டாமல் பொது மக்களின் நலன் கருதி மது அருந்தும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து சரவண பொய்கை குளத்தை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யுமாறு கோரிக்கை விடுகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!