ஆட்சியா் குடிமராமத்து பணிகளை பார்வையிட்டார்

மயிலாடுதுறை மாவட்டம் எருக்கஞ்சேரி காலமநல்லூர் கிடங்கள் வாய்க்கால்களில் தலைப்பு மதகுகள் மறுகட்டுமான பணிகள், தூர்வாறும் பணிகள் நடைபெற்று வருகிறது. முழுமையாக தூர்வாறி, தண்ணீரை சேகரிக்க மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் கட்டுமான பணிகள் மற்றும் குடிமராமத்து பணிகளை பார்வையிட்டார்.நாகை மாவட்டத்தில் (மயிலாடுதுறை) இந்த ஆண்டு, பொதுப்பணித்துறை மூலமாக 131குடிமராமத்து பணிகளும், 50 திட்டப்பணிகள் மூலமாகவும், காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் தூர்வாறப்பட்டு வருகின்றன. மேலும், தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள எருக்கட்டாஞ்சேரி, காலமநல்லூர், கிடங்கள் ஆகிய இடங்களில் நடைபெறும் தலைப்பு மதகு மறு கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறியது;
3அடி முதல் 2மீட்டர் வரை அகலமுள்ள சிறு வாய்க்கால்கள், நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு 4,600கி.மீ தூரம் உள்ளன. இவற்றில் சி.பிரிவு வாய்க்கால்கள், 1,200கி.மீ நீளமும், டிபிரிவு வாய்க்கால்கள் 3000கி.மீ தூரமும் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் 1,300கி.மீ தூர்வாறப்பட்டன. இந்த ஆண்டு 3,167கி.மீ தூரம் ஊராட்சி ஒன்றியங்களில் 100 நாள் வேலை திட்டம் மூலம் செடிகொடிகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவற்றில் 900கி.மீ வேலைகள் நிறைவுபெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள், தண்ணீர் வருவதற்குள் ஊரக வளர்ச்சித்துறை, உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை இணைந்து தண்ணீரை விவசாயத்திற்கு கொண்டு சேர்க்கவும், சேமித்துவைத்து, குடிநீர் ஆதாரங்களை பெருக்குவதற்கும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.ஆய்வின்போது, மயிலாடுதுறை பொதுப்பணித்துறை காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் ஆசைத்தம்பி, பொறையார் செயற்பொறியாளர் சண்முகம், செம்பனார்கோவில் உதவி பொறியாளர் வீரப்பன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இரா.யோகுதாஸ்,
மயிலாடுதுறை செய்தியாளர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image