Home செய்திகள் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாக விழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது…

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாக விழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது…

by Askar

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாக விழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக விழா வெகு சிறப்பாக நடைபெறும் இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் ஏந்தி பாத யாத்திரையாக வந்து முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்வார்கள்.

மேலும் அலகு குத்தியும் காவடி எடுத்தும் பறவை காவடி பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் பெரும் கோலாகலமாக ஆண்டுதோறும் நடைபெறும்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்க மத்திய அரசும் மாநில அரசும் தடை விதித்துள்ளது.

இதனால் பல்வேறு நிகழ்ச்சிகள் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டது எனினும் இன்று பக்தர்கள் சிலர் பால்குடம் எடுத்து வந்து கோவில் வெளியே உள்ள கதவில் முருகனின் வேல் பாலைக் கொண்டு அபிஷேகம் செய்து சூடம் ஏற்றி வழிபட்டு சென்றனர்.

எனினும் வழக்கம்போல பக்தர்கள் இன்றி இன்று முருகப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் அங்குள்ள சிவாச்சாரியார்களால் நடத்தப்பட்டது.

பக்தர்கள் இன்றி நடைபெற்ற இந்த அபிஷேக ஆராதனை பின் கோவில் நிர்வாகம் சார்பாக புகைப்படம் மற்றும் வீடியோக்களை பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டது.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!