சீர்காழி அருகே ஊரடங்கால் புடலங்காய் விற்பனை செய்ய முடியாமல் விவசாயி தவிப்பு. நிவாரணம் வழங்க கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அரூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது வயலில் புடலங்காய் விவசாயம் செய்துள்ளார். தற்போது நல்ல நிலையில் புடலங்காய் விளைந்தும் விற்பனை செய்ய முடியாமலும், புடலங்காயை வாங்க வியாபாரிகள் யாரும் வராததாலும் கொடியில் காய்த்து தொங்குகிறது.மேலும், ஆட்கள் யாரும் புடலங்காயை பறிக்க வராததால் செடியிலேயே அழுகி வீணாகி வருகிறது. நல்ல நிலையில் விளைந்தும் கொரோனா ஊரடங்கால் விற்க முடியாத நிலையில் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார். உடனடியாக வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட புடலங்காய் விவசாயத்தை கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..