பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற வேண்டிய திருப்பணிகள் தொடக்கம்:பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி!

பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற வேண்டிய திருப்பணிகள் தொடக்கம்:பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் மலைக்கோவிலில் கடந்த 2004ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து கும்பாபிஷேகம் நடந்து 16ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம்30ம் தேதி பழனி கோவிலில் திருப்பணிகள் நடைபெறுவதற்கான பாலாலய நிகழச்சி நடைபெற்றது. பத்து கோடி ரூபாய் செலவில் பழனிகோவில் ராஜகோபுரம் உட்பட அனைத்து கோபுரங்கள், பாதவிநாயகர் கோவில் மற்றும் சிதிலமைடந்த சன்னிதானங்கள் சீரமைக்கும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் மற்றும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

பணிகள் துவங்கிய சில நாட்களிலேயே கொரோனா வைரஸ் காரணமாக கோவில் திருப்பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது பழனி கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருப்பணிகள் மீண்டும் துவங்கியுள்ளது. இதன்படி பழனி மலைக்கோவிலில் சிதிலமடைந்துள்ள கோபுரங்கள், சிலைகள் மற்றும் பதுமைகளை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பழனி மலைக்கோவில் ராஜகோபுரத்தில் சாரம் கட்டி திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பழனி மலைகக் கோவில் கும்பாபிஷேகத்திற்காக மீண்டும் திருப்பணிகள் துவங்கியுள்ளதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..